Sale!

Karuppu Kavuni Rice – கருப்பு கவுனி அரிசி

150.002,800.00

Compared to regular brown rice, black rice is higher in protein, iron, and fibre. The anthocyanins responsible for its dark purple hue also supply powerful antioxidants. Beneficial nutrients in black rice include: B vitamins like riboflavin, niacin, and folic acid: These support energy production and brain health.

SKU: N/A Category: 1

கருப்பு கவுனி அரிசி  :

இதய ஆரோக்கியம் :கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது, ‘LDL’ என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால் உண்டாகும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு வேளை கருப்பு கவுனி அரிசியை உட்கொள்ளவது அவசியம் ஆகும்.

நீரழிவு நோய் :மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி கருப்பு கவுனி அரிசி டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்கின்றனர். ஆய்வின் படி, இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கருப்பு கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

புரதச்சத்து :வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது. இது உடலில் தசைகளை உருவாக்குவதிலும், உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் :கருப்பு கவுனி அரிசியில் காணப்படும் ‘ஃபீனாலிக்’ என்ற கலவைகளில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதோடு, உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.

உடல் ஆரோக்கியம் :நிபுணர்களின் கூற்றுப்படி, கருப்பு கவுனி அரிசியில் குறைவான அளவில் கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் அடங்கியிருக்கிறது. அதோடு அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. இதனை உணவாக அன்றாடம் எடுத்துக்கொள்வதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.

கருப்பு கவுனி அரிசி ரெசிபி : முதலில் கருப்பு கவுனி அரிசியை வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை எடுத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய், 2 நறுக்கிய பூண்டு, 1 பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும்.

அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும். உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து, நன்றாக கிளற வேண்டும்.

பிறகு வேகவைத்த கருப்பு கவுனி அரிசியை இதில் சேர்க்க வேண்டும்.

மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை வதக்கி, பின்னர் எலுமிச்சை மற்றும் கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து பரிமாறலாம்.

இதனை அன்றாடம் சரியான அளவில் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Weight N/A
weight

10Kg, 5Kg, 1Kg, 500g

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare