மஞ்சள் தூள் :
இதயம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது: மஞ்சளில் காணப்படும் முக்கிய வேதி பொருளில் குர்குமின் குறிப்பிடததகுந்த ஒன்று. இது இதயத்திற்கு தரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் இதிலிருக்கும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள். மஞ்சளில் நிறைந்திருக்கும் குர்குமினானது ரத்தத்தை மெலிக்கவும், கொழுப்பை குறைக்கவும் மற்றும் தமனிகள் குறுகுவதை தடுக்கவும் உதவும் என நம்பகமான ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் குர்குமின் பல இதய பிரச்சனைகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.
கேன்சரை தடுக்கிறது : மஞ்சள் இருக்கும் குர்குமினின் ஆன்டி-கேன்சர் விளைவானது பல்வேறு முக்கிய மருத்துவ பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்ட மருத்துவ குணங்களில் ஒன்றாக உள்ளது. குர்குமினானது ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-இன்ஃபளமேட்ரி என்பதால் செல்களின் சேதம் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது. அதே போல பல மருத்துவ ஆய்வுகளின்படி குர்குமினானது கட்டிகளுக்கு எதிராக செயல்படும் விளைவுகளை கொண்டுள்ளது. இது கட்டிகள் உருவாவது மற்றும் ஆபத்தான செல்கள் உடலில் பரவுவதையும் தடுக்கிறது. இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ள குர்குமினை புற்றுநோய் சிகிச்சையில் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபியுடன் இணைந்து பயன்படுத்துவது பற்றி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஒட்டுமொத்த ஆரோக்கியம்... மஞ்சளானது நம்முடைய ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஒரு சக்திவாய்ந்த மூலிகையாக இருக்கிறது. ஏனெனில் குர்குமின் பல்வேறு வழிகளில் அழற்சி பாதைகளை மாற்றியமைக்கிறது. குர்குமினானது ப்ரோ-இன்ஃபளமெட்ரி மீடியேட்டர்ஸ்களின் செயல்பாட்டை நேரடியாக கட்டுப்படுத்துகிறது மற்றும் அழற்சிக்கு சார்ஒரு மரபணுக்களை திறம்பட முடக்குவதாக் ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. சுருக்கமாக சொன்னால் அனைத்து நோய்களுக்கும் மூல காரணமாக இருக்கும் உடலில் ஏற்படும் அழற்சியை தடுக்கிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது: நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ள பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சைகளில் ஒன்றாக மஞ்சள், இஞ்சி மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் உள்ளது. குர்குமினின் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்திவாய்ந்த திறனை கொண்டுள்ளன. பொதுவாக மஞ்சளில் காணப்படும் குர்குமினானது நம்முடைய ரத்த ஓட்டத்தில் நன்கு உறிஞ்சப்படுவதில்லை என்றாலும், மஞ்சளை கருப்பு மிளகுடன் சாப்பிடுவது இதனை மேம்படுத்துகிறது. ஏனென்றால் மிளகில் பைபரின், ரத்தம் குர்குமினை உறிஞ்ச உதவுகிறது.
எடையை குறைக்க… 2015-ஆம் ஆண்டில் வெளியன் ஆய்வு ஒன்று மஞ்சளில் காணப்படும் குர்குமினானது BMI-ல் எப்படி நேற்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை வெளிப்படுத்தியது. அதிக எடை கொண்நபர்கள் 95 சதவீதம் குர்குமின் கொண்ட 800 மி.கி சப்ளிமெண்ட்டை கடுமையான டயட்டுடன் எடுத்து கொண்டனர். முதல் 30 நாட்களில் அவர்களின் BMI-ல் 2% மற்றும் 60 நாட்களுக்குப் பிறகு 5-6% வரையிலான நேர்மறை மாற்றங்களை கண்டனர். மஞ்சளின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் எடையை குறைக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.