தூய மல்லி சம்பா அரிசி :
தூயமல்லி அரிசியில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதன் காரணமாக நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறது. இரத்தத்தையும் சுத்தப்படுத்தி உடலை புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்கிறது. இந்த அரிசியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
சிலருக்கு பித்தத்தினால் அடிக்கடி வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனை இருந்துக்கொண்டே இருக்கும். பித்தம் உடலில் அதிகம் இருப்பவர்கள் இந்த தூயமல்லி அரிசியால் சமைத்த உணவினை சாப்பிட்டு வர பித்தத்திலிருந்து நல்ல மாற்றம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் வாத பித்தம், கபம் போன்ற நோய்களும் குணமாகும்.
உடலானது நல்ல ஆற்றலுடன் இருந்தால் தான் எந்த ஒரு வேலையினையும் நாம் முழுமையாக செய்ய முடியும். அதற்கு நாம் சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தூயமல்லி அரிசியானது உடலை வலுவாக வைத்துக்கொள்ள உதவுகிறது. தூயமல்லியின் அரிசி மட்டும் இல்லாது இதனுடைய தவிடும் மிகுந்த சக்தியினை கொண்டுள்ளது. இந்த அரிசியின் நீராகாரம் இளநீர் போன்ற சுவையுடன் இருக்கும். இதனால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது.