சம்பா கோதுமை :
உயிர்ச்சத்துக்கள்: அதிலும், சம்பா ரவையை எடுத்துக் கொண்டால், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம் போன்ற தாதுக்களின் வளமான ஆதாரங்கள் நிறைந்து கிடக்கின்றன. முக்கியமாக கரையாத நார்ச்சத்துக்கள் இந்த சம்பா ரவையில் உள்ளன..
இதனால் இதய நோய்கள் எளிதில் நெருங்கவிடாமல் தடுக்கப்படுகிறது.. அதிகமான நார்ச்சத்துக்கள், மலச்சிக்கல் ஏற்படும் பிரச்சனையை எளிதாக தீர்க்கிறது.. இதனால் ஜீரணம் எளிதாவதுடன், இரைப்பை குடல் கோளாறுகளையும் அண்டவிடாமல் தடுக்கிறது..
அஜீரணம் காரணத்தினால், புளித்த ஏப்பம், அசிடிட்டி உள்ளிட்ட செரிமான கோளாறு இருந்தால், கோதுமை ரவையில் கஞ்சி செய்து சாப்பிட்டால் போதும்..
உடல் எடை: இந்த ரவையில் குறைவான கார்போஹைட்டும், அதிகமான புரோட்டீனும் நிறைந்துள்ளதால், உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தவிர்க்க முடியாத உணவாக திகழ்கிறது, நிறைய நார்ச்சத்து + புரதம் + வைட்டமின் B + குறைந்த கலோரி போன்றவை அனைத்துமே உள்ளதால், மிகச்சிறந்த டயட் உணவாக இந்த சம்பா ரவை உள்ளது. இதனை காலையில் டிபனாக சாப்பிடும்போது, வயிறு நிரம்பிய உணர்வு கிடைப்பதுடன், அன்றைய தினத்துக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது.. உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.. உடல் எடையும் மெல்ல குறைய துவங்குகிறது.
கொழுப்பு: மேலும், உடலிலுள்ள அதிக கொழுப்பை கரைத்து வெளியேற்ற துணை புரிகிறது.. அதேபோல, டிரை கிளிசரைடு அளவையும் குறைக்கிறது. இந்த சம்பா கோதுமை ரவையில், காய்கறிகளையும் சேர்த்து சமைத்தால், உடல் எடை குறைவோருக்கும், நீரிழிவுநோயாளிகளுக்கும் மிகப்பெரிய பலனை தரும். தினமும் 3 வாரங்களுக்கு 23 கிராம் நார்ச்சத்து எடுத்து கொள்பவர்களுக்கு, உடலில் 5% கெட்ட கொழுப்பை குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அதைவிட முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த சம்பா ரவை, வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. சர்க்கரையின் அளவை கணிசமாகக் குறைப்பதுடன், கொழுப்புச்சத்து, டிரைகிளைசிரைட் (Triglyceride) அளவையும் பிரதானமாக குறைக்க செய்கிறது.. ரத்த சர்க்கரையின் அளவைச் சமநிலையில் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது சம்பா ரவை..
இன்சுலின்: இந்த சம்பா கோதுமையில், மெக்னீசியம் நிறைந்திருக்கின்றன.. எனவே, இன்சுலின் உணர்திறனையம் ஊக்குவிக்க செய்கிறது. பொதுவாகவே, மெக்னீசியம் நிறைந்த உணவுகள்14 சதவீதம் நீரிழிவு அபாயத்தை குறைக்க செய்கிறதாம். கோதுமை ரவையில் செலினியம் சத்துக்கள் உள்ளதால், தொற்றுநோய்களை அண்ட விடாமல், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது… அதேபோல, எலும்பு ஆரோக்கியத்துக்கும் நரம்பு மண்டலத்துக்கும் கோதுமை ரவை மிகவும் நல்லது.. எலும்பு அடர்த்தியை அதிகரிப்பதுடன், எலும்பு, பற்களையும் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்கிறது.
மூட்டு வலி: மேலும், இதில், பாஸ்பரஸ், துத்தநாகம், மெக்னீசியம் போன்றவை உள்ளதால், ஒட்டுமொத்த நரம்பு மண்டலம் பாதுகாக்கப்படுகிறது.. மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள், முழங்கால் வலி உள்ளவர்கள், இந்த சம்பா கோதுமையை வறுத்து தூள் செய்து தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்..