மிளகாய் தூள் :
மிளகாயின் நறுமணத்துக்கு காரணம் அதில் இருக்கும் கேப்சைசின் என்னும் வேதிப்பொருள். இதுதான் மிளகாயை நன்மை செய்யும் குணத்துக்கு உதவுகிறது. இது அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, உடல் பருமன் எதிர்ப்பு குணங்களையும் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். காப்சைசின் இத்தகைய நன்மைகளை கொண்டிருந்தாலும் இது குறித்த நம்பிக்கையான ஆய்வு மேலும் தேவை.
உணவில் கவனம் செலுத்தினால் தான் ஆரோக்கியம் தக்க வைக்க முடியும். உணவுகள் நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டின் குணங்களையும் கொண்டவை. உடல் உறுப்புகளில் குறிப்பாக இதயத்துக்கு நன்மை செய்வதில் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தணிக்க காப்சைசின் உதவுவதாக ஆய்வுகள் சுட்டிகாட்டுகிறது. இது புற்றுநோயால் இறக்கும் அபாயத்தை குறைக்கும் பங்கை கொண்டிருக்கிறது.
சிவப்பு மிளகாயில் பொட்டாசியம், ஃபைபர் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6 , வைட்டமின் இ போன்றவை உள்ளது. இது ரத்த அழுத்தத்துக்கு பயனளிக்கும். இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த நாளங்களை தளர்வாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் சி இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நோய்களை எதிர்த்து போராடி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைக்கிறது.
ஆரஞ்சு பழத்தை காட்டிலும் இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதில் சக்தி வாய்ந்த ஆன் டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் இது ரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க உதவுகிறது. சிவப்பு மிளகாயில் இருக்கும் காப்சைசின் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதால் உடல் கலோரிகளை எரிக்க உதவுகிறது.
சருமத்தில் வீக்கம் வலியை குறைக்க இது உதவுகிறது. தோல் தடிப்பு, கீல் வாதம், தொண்டைப்புண் போன்றவற்றால் உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க இது உதவுகிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் பொதுவான பிரச்சனைகள் பலவற்றுக்கும் சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்படுகிறது. மிளகாயில் இருக்கும் காப்சைசின் வலி நீக்க பயன்படுத்தப்படும் மருந்துபொருள்களில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
உலகெங்கும் உள்ள மக்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவது அதிகரித்து தான் வருகிறது. இது பொதுவான நிலை. இதய நோயால் மரணமடைபவர்களும் குறிப்பிட்ட சதவீதத்தின்ர் உண்டு. சிவப்பு மிளகாய் இதய நோய்கள் மற்றும் இதன் அபாயங்களை குறைக்க உதவும். சிவப்பு மிளகாயில் உள்ள கலவைகள் எல் டி எல் மற்றும் ட்ரைகிளிசரைட்களை குறைக்க உதவும்.
தமனிகள் ரத்த நாளங்களில் இருக்கும் அடைப்பை நீக்க இவை பயன்படுகிறது. சுகாதார நன்மைகளை அளிக்கும் வகையில் மிளகாய் அளவு மற்றும் வகைகள் குறித்து ஆய்வு தெரிவிக்கவில்லை. மிளகாய் உணவு வழிகாட்டுதல்களை வழங்க இன்னும் கூடுதல் ஆய்வு தேவைப்படுகிறது.