பஞ்சாப் கோதுமை :
இரத்தத்தை சுத்தப்படுத்தும்
தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.
உடல் எடை குறையும் பெரும்பாலானோருக்கு கோதுமைப் பொருட்களை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று தெரியும். இருப்பினும் உடல் எடையை குறைக்க நினைப்போர் மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது.
செரிமானத்தை சீராக வைக்கும்
மைதாவை அதிகம் சாப்பிட்டால், செரிமான பிரச்சனை ஏற்படும். ஆனால் கோதுமையை சாப்பிட்டால், அது எளிதில் செரிமானமாகும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படாது.
இதய நோய்
இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.
புற்றுநோயை தடுக்கும்
உங்களுக்கு தெரியுமா கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. ஆகவே இதனை தவறாமல் கொஞ்சமாவது சாப்பிட்டு வாருங்கள்.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் உள்ளதா? அப்படியானால் மைதா ரொட்டி சாப்பிடுவதை நிறுத்தி, கோதுமை ரொட்டியை சாப்பிடுங்கள். இது உயர் இரத்த அழுத்தம் ஏற்படாதவாறு பாதுகாக்கும்.
வாய் துர்நாற்றம்
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள், கோதுமை உணவை அதிகம் சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். ஏனெனில் கோதுமையில் உள்ள குறிப்பிட்ட வைட்டமின்கள் வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.
நீரிழிவு
நீரிழிவு நோயாளிகள், இன்சுலின் சுரப்பை சீராக வைப்பதற்கு கோதுமையை உணவில் சேர்த்து வருவது நல்லது.