பனி வரகு:
குளிர், மழைக் காலங்களில் பெய்யும் பனியில்கூட வளர்ந்துவிடக்கூடிய, வரகு தானியத்தின் ஒருவகை என்பதாலேயே இது, “பனிவரகு” எனப்படுகிறது. சாகுபடி முறையைப் பொறுத்து, 75 (அ) 85 நாட்களில் விளையக்கூடிய பயிர்வகை இது. பெருமளவு வறட்சியையும் தாங்கி வளரும் தானியமிது.
கால்சியச் சத்து நிறைந்திருப்பதால், பற்கள், எலும்புகளுக்கு வலிவும், பொலிவும் ஊட்டுகிறது.
நீரிழிவுநோயாளிகள் பனிவரகை, முறைப்படி உட்கொண்டுவர, நீரிழிவு கட்டுக்குள் வரும்.
மலச்சிக்கல், நரம்புத்தளர்ச்சி முதலியவற்றை நீக்கி, உடலை உறுதியாக்கும். நோய் எதிர்ப்பாற்றலைப் பெருக்கும்; உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் ஏற்றது.
பனிவரகைக் கொண்டு, முறுக்கு, சீடை, அதிரசம், பாயாசம்,உள்ளிட்ட சிற்றுண்டிகளும், பணியாரம், அடை, கஞ்சி, புலாவ், முதலான உணவுகளையும் தயாரித்துண்ணலாம்.