பனங்கற்கண்டில் குறை அளவே இனிப்பு சுவை இருக்கும். ஆனால் பல்வேறு மருத்துவ குணநலன்களை கொண்டிருக்கும் பனங்கற்கண்டு உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு நன்மைகளை தருவதோடு, உடலை பாதுகாப்பாகவும் வைக்க உதவுகிறது.
பனங்கற்கண்டு சத்துக்கள் மற்றும் பயன்கள்
பனங்கற்கண்டில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் இடம்பிடித்துள்ளன. இவை உடல் ஆரோக்கியத்தை பேனி காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் 24 வகையான இயற்கை சத்துக்களை இருப்பதாக கூறப்படுகிறது. வாதம், பித்தத்தை நீக்கி பசியை தூண்டவும் செய்கிறது. சர்க்கரை மாற்றாக இதை பயன்படுத்துவதலாம். இதன்மூலம் உடல் எடையும் kணிசமாக குறைகிறது.
ஆஸ்துமா, ரத்த சோகை, சுவாசப்பிரச்னை, இருமல், சளி, ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை போன்ற பல உடல் நல பாதிப்புகளுக்கு மருந்து போல் செயல்படுகிறது.
இருமலுக்கான சிறந்த நிவாரணியாக இருக்கும் பனங்கற்கண்டு தொண்டை கரகரப்பை போக்கி, சளியை வெளியேற்றுகிறது. பனங்கற்கண்டை வெறுமனே வாயில் போட்டு மென்று உமிழ்ந்தாலே பலன்களை பெறலாம்.
உடல் உபாதைகளை போக்கும் பனங்கற்கண்டு
பனங்கற்கண்டு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வாயில் மென்று சாப்பிட்டா் வாயில் இருக்கும் துர்நாற்றம் காணமல் போயிவிடும். அத்துடன் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களையும் அழித்துவிடும்.
எப்போதும் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு உள்ளவர்கள் அரை டேபிள் ஸ்பூன் பசு நெய்யுடன் சிறிது அளவு பனங்கற்கண்டு, நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் சுற்றுப்பாக மாறிவிடுவார்கள்
தீராத சளிப்பிரச்னை இருப்பவர்கள் 2 பாதாம், 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, அரை டேபிள் ஸ்பூன் மிளகு பொடி சேர்த்து மிக்ஸியில் அரைத்து அந்த பொடியை பாலில் கலந்து பருகினால் உடனடியாக பலன் பெறலாம்
பனங்கற்கண்டு, பாதாம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து இரவு படுப்பதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் நினைவாற்றால், கண்பார்வை அதிகரிக்கும்
பனங்கற்கண்டு, பாதாம், மிளகு ஆகியவற்றுடன் சேர்த்து வாரத்துக்கு 2 நாள்கள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, பாதிப்பு எதுவும் ஏற்படாது
இரண்டு டேபிள் வெங்காய சாறு, ஒரு டேபிள் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் பிரச்னை சரியாகும்.
சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களை விரட்டும் தன்மையை கொண்டிருக்கும் பனங்கற்கண்டு பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலு சேர்க்கிறது. ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுக்கிறது.
கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் பனங்கற்கண்டு சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்னை நீங்குகிறது
பனங்கற்கண்டு இயற்கை வயாக்ரா என்று அழைக்கப்படுகிறது. இதை பாலில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தியானது அதிகரிக்கும்
மெலிந்த உடல் இருக்கும் குழந்தைகளுக்கு பனங்கற்கண்டு கொடுப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்
இருதயம் தொடர்பான நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டதாக பனங்கற்கண்டு உள்ளது. இதை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் இருதயம் ஆரோக்கியமானது வலுப்படுகிறது
Reviews
There are no reviews yet.