வேப்ப எண்ணெய் :
வேப்ப எண்ணெயில் (Neem oil) உள்ள வைட்டமின் E மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் ஆழமாக ஊடுருவி, வறட்சியால் ஏற்படும் விரிசல்களை குணப்படுத்த உதவும். இது சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை மீட்டெடுக்க உதவும் ஆர்கானிக் வேப்ப எண்ணெய் (Organic neem oil). சருமத்தில் இருந்து ஈரப்பத இழப்பு ஏற்படாமல் குறைக்க உதவுகிறது.
வேப்ப எண்ணெய் சிவந்த, அரிப்பு மிகுந்த, வீக்கமடைந்த சரும அழற்சி பிரச்சினையை போக்க உதவியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், இது முகப்பரு, தீக்காயங்கள், அரிக்கும் தோலழற்சி, சொரியாசிஸ் மற்றும் சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களையும் குணப்படுத்தும் பியூர் நீம் ஆயில் (Pure neem oil). வேப்ப எண்ணெயைச் சருமத்தில் பயன்படுத்தும்போது ஹிஸ்டமைன் மற்றும் பிற எரிச்சலூட்டும் காரணிகளின் உற்பத்தி தடைச் செய்யப்படுகிறது, இதனால் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. எக்ஸிமா மற்றும் டெர்மடிடிஸ் ஆகிய அரிப்பு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க நிம்பிடின் போன்ற அழற்சி எதிர்ப்பு பொருட்களும் வேம்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வேம்பு பல நூற்றாண்டுகளாக, அதன் குணப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. அதன் கிருமிநாசினி பண்புகள் காரணமாக, சிறிய வெட்டுக்காயங்கள் மற்றும் சிராய்ப்புகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். காயங்கள் அல்லது சிராய்ப்பு ஏற்பட்ட சருமத்தில் வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தும்போது, அது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. ஒரு ஆயுர்வேத ஆய்வில், வேப்ப எண்ணெயை மஞ்சள் உடன் பயன்படுத்தும் போது காயங்களை குணப்படுத்த இது மிகவும் பயனுள்ளதாக (neem oil benefits) இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது