நரி பயறு :
நரிப்பயிறு, இந்தியா முழுவதிலும் இந்தப்பயிர் பயிரிடப்படுகிறது. இது முளைக்கட்டியும், சமைத்தும் உண்ணப்படுகிறது. இதை மஹாராஷ்ட்ராவில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இது சிறியளவில் இருக்கும். பிரவுன் மற்றும் சிவப்ப பிரவுன் அல்லது பச்சை நிறங்களில் இருக்கும். இதில் புரதச்சத்து அதிகம் உள்ளது.
நரிப்பயிரின் நன்மைகள்
இதில் புரதம், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ளது. உங்கள் தினசரி உணவில் இதை சேர்க்கலாம். இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது எண்ணற்ற் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
எலும்புகளை வலுவாக்குகிறது
உங்கள் எலும்பு வலுவிழந்து வந்தால், இந்த நரிப்பயிரை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. அது எலும்பு தொடர்பான பிரச்னைகளை மட்டும் சரிசெய்யவில்லை, அவற்றுக்கு வலுகொடுக்கிறது.
நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தி என்பது நமக்கு மிக முக்கியமான ஒன்று ஏனெனில், புதிய தொற்றுகளும், புதுப்புது நோய்களும் அன்றாடம் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
உடல் எடை குறைக்க உதவுகிறது
தாவர புரதங்கள் பிரபலமாகி வரும் காலத்தில் அதில் முதல் இடத்தில் உள்ளது நரிப்பயிறு, நரிப்பயிறில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது. இது தசைகளை சரிசெய்கிறது மற்றும் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. ஆரோக்கியமும், உடலுக்கு வலுவும் சேர்க்கிறது.
குடல் இயங்க உதவுகிறது
பாசிபயிரைப்போல், நரிப்பயிரிலும் செரிமானத்தை கொடுக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அது குடல் இயக்கத்தை முறைப்படுத்த உதவுகிறது. நரிப்பயிறு மலச்சிக்கலை போக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
மனஅழுத்தத்தை குறைக்கிறது
நரிப்பயிறை தினமும் உட்கொள்வது மனஅழுத்தத்தை குறைக்கிறது. திடீரென ஏற்படும் பதற்றத்தை குறைக்கிறது. இதில் உள்ள சிங்க் சத்து மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது.
வைட்டமின் பி நிறைந்தது
வைட்டமின் பி, உடல் சரியாக இயங்குவதற்கு உதவுகிறது. சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு போதிய வைட்டமின் பி சத்துக்கள் உணவில் வைட்டமின் பி சத்துக்கள் கிடைப்பது கடினம். நரிப்பயிரில் அது அதிகம் உள்ளது. இது நினைவாற்றலை அதிகரிக்கிறது. உடலின் சக்தியை அதிகரிக்கிறது. செல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.