குருவிகார் அரிசி :
குருவிக்கார் அரிசி
குருவிக்கார் (Kuruvikar)இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும். குறைந்த தண்ணீரைக் கொண்டு, முழு வளர்ச்சியான ஐந்தடி உயரம்வரை வளரும். வெள்ளம், வறட்சி போன்றவற்றைத் தாங்கி மகசூல் கொடுக்கும். அதிக நெல் மணிகளைக் கொண்டிருக்கும். பயிரில் சொரசொரப்புத் தன்மை அதிகமாக இருப்பதால், பூச்சி தாக்குதல் இருக்காது. களை கட்டுப்படும்.குருவிக்கார் நெல் ரகத்தில் அதிகமான மருத்துவக் குணங்களும்(Medicinal Value), புரதச் சத்துகளும் (Protein value) உள்ளன. நார்ச்சத்து (Fibre)அதிகம்.
குருவிக்கார் துத்தநாகம், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.அதிகமான மருத்துவக் குணங்களும் (Medicinal Value), புரதச் சத்துகளும் (Protein value) நார்ச்சத்தும் (Fibre) அதிகம் உள்ளன.
குருவிக்கார் உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits):
- இதன் பழைய சாதம் சீக்கிரமாகக் கெட்டுப் போகாது. இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரத்துக்குப் பசியும் எடுக்காது.
- நோயளிகளுக்கு இந்த அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்தால், நோயின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து சீக்கிரம் குணமடைவார்கள்(Recovery).
- குழந்தை பெற்ற தாய்மார்கள் இதைச் சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால்(Breast feeding)அதிகம் சுரக்கும். தாய்க்கு ஏற்பட்ட பலவீனம் நீங்கும்.
- கடுமையாக உழைப்பவர்கள் இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சோர்வு(Physical fatigue) நீங்கும். நீண்ட நேரம் களைப்பு இல்லாமல் வேலை செய்யலாம்.
- நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டு உடல் வலிமை இழந்திருப்பவர்கள் இந்த அரிசியைச் சாப்பிட்டுவந்தால், இழந்த சக்தியை(Energy) மீண்டும் பெறலாம்.