காட்டுயானம் அரிசி:
காட்டுயானம் (Kattu Yanam)
ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே இந்த நெற்பயிர்க்கு “காட்டுயானம்” எனப் பெயர் பெற்றுள்ளது
காட்டுயானம் (Kattu Yanam) நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய நெல் வகையான இது, மற்றப் பாரம்பரிய நெல் இரகங்களை விட கூடுதல் மருத்துவக் குணம் (Medicinal value) கொண்டது. எந்தத் தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய இந்நெல் இரகம், வறட்சியிலும், வெள்ளத்திலும் மகசூல் கொடுக்கக்கூடியதாகும்.
காட்டுயானம் உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits):
- நீரிழிவு நோய்க்கும்(Diabetis) நல்ல பலன் அளிக்கக்கூடியது
- புற்றுநோயைக்(Cancer) குணப்படுத்தும் தன்மை உள்ளது.
- ஆண்டி ஆக்சிடன்ட்(Anti Oxidant) நிறைந்திருப்பதால், இதய நோய்க்கு மிக சிறந்த மருந்து.
- பிரமேக சுரமும், எனப்படும் குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும்.
- விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.
- பசியைத் தாமதப்படுத்தும்.
- இந்த அரிசி செரிமானம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் குளுக்கோஸை(Glucose) சேர்ப்பதால், பயணங்களில் சாப்பிடச் சிறந்தது. நீடித்த எனர்ஜி (Energy) கிடைக்கும்.