கருங்குறுவை:
கருங்குறுவை பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் இது, 110
நாட்களில் அறுவடைக்குத் தயாராகிறது. சித்த மருத்துவத்தின் முக்கிய
மூலப்பொருட்களில் ஒன்றாகக், இந்த கருங்குறுவையின் அரிசிப் பயன்படுத்தப்படுகிறது.
அரிசிக்கஞ்சி, இட்லி, தோசைக்கு ஏற்ற இரகமாக உள்ள இதன், நெல் கறுப்பாகவும், அரிசி
சிவப்பாகவும் காணப்படுகிறது. கருங்குறுவை நெல் மணிகள் ஒரு ஆண்டு முழுவதும்
பூமியில் கிடந்தாலும், மக்கிப்போகாமல் ஒரு ஆண்டுக்குப் பிறகும் முளைக்கும் திறன்
உடையது.
மருத்துவ பயன்கள்:
உடலை வலுவாக்கும் காயகல்பச் சக்தி உள்ளது
கருங்குறுவை அரிசியில் குஷ்டத்தையும் விஷக்கடியையும் போக்கும் சக்தி உள்ளது
இதை உண்டுவந்தால் மிகக் கொடிய வியாதியான காலரா மட்டுப்படும். மிகவும் இனிப்புச் சுவையுள்ள இந்த நெல் (அரிசி), சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்கக் கூடியதாகவும், மனித உடலுக்குச் சுகத்தைக் கொடுக்க வல்லதாகவும் உள்ளது.