ஆளி விதைகள் :
மாதவிடாய் காலத்தை ஒழுங்குபடுத்துகிறது : அண்டவிடுப்பு மற்றும் மாதவிடாய்க்கு இடைப்பட்ட காலத்தை சாதாரணமாக வைத்திருப்பது பெண்களுக்கு முக்கியமான ஒன்று. அதை சீர்படுத்த ஆளிவிதைகள் செய்கின்றன. இது கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிப்பதோடு ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது.
முடி மற்றும் தோல் : ஆளி விதைகள் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆளி விதைகளில் வைட்டமின் ஈ ஏராளமாக உள்ளதால் வைட்டமின் ஈ மாத்திரைகள் பயன்படுத்துவதற்கு பதிலாக ஆளிவிதை எண்ணெயை நேரடியாக உச்சந்தலையிலும் முடிகளிலும் தேய்க்கலாம். இது முடியை பலப்படுத்துவதோடு அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இதேபோல், ஆளி விதைகளின் ஜெல் முடி மற்றும் தோலுக்கு நன்மை பயக்கும். தலைக்கு குளிக்கிக்கும் போது 1 மணி நேரத்திற்கு முன், ஆளி விதை ஜெல்லை தலைமுடியில் தடவி கழுவவும். இது முடி மற்றும் முகத்தின் பொலிவை அதிகரிக்க உதவுகிறது. முகத்திற்கு தேய்த்து காய வைத்து கழுவும்போது தோல் புத்துணர்ச்சி பெரும்.
மலச்சிக்கலை நீக்கும் : ஊறவைத்த ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வறுத்த ஆளி விதை தூளை ஒரே இரவில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் சாப்பிடுவது மலச்சிக்கலை குணப்படுத்த உதவும். மேலும் செரிமான பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளும்.
எடை குறைக்க உதவும் : எடையை குறைக்க உடற்பயிற்சி பத்தியம் என்ற பல முயற்சிகளை செய்வோம் அதோடு ஆளி விதைகளை உட்கொள்வது எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இதில் ஒமேகா கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சுவதற்கு, ஆளிவிதை தூளை உட்கொள்வது நல்லது
இதய ஆரோக்கியம்: இன்றைய காலத்தில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆளி விதைகளை உட்கொள்வதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும். ஆளி விதையை அரைத்து தண்ணீரில் கலந்து காலையில் உட்கொள்வது பல்வேறு நன்மைகளை கொடுக்கும்.