நாட்டு மல்லி தூள் :
சால்மோனெல்லா என்ற நுண்ணுயிரை அடக்கும்
மிகவும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி பயன்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவு சம்பந்தமான நோய்களை உண்டாக்கும். உங்கள் உணவுகளில் மல்லி போன்ற ஆரோக்கியமான மசாலாக்களை சேர்த்தால் இவ்வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.
மல்லியில் பைடோந்யூட்ரியெண்ட் குணங்கள் உள்ளதால் தான் நமக்கு பல மருத்துவ பயன்களை அளிக்கிறது. அதிலுள்ள ஆவியாகும் எண்ணெய்யில் லினலூல், பார்நியோல், கார்வோன், எபிஜெனின், சூடம் என பல பைடோந்யூட்ரியெண்ட்கள் உள்ளது.
பருக்களுக்கு நிவாரணி
உடல்நல பலன்களை தவிர மல்லி பொடி பருக்களை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. இளைஞர்களுக்கு பருக்கள் என்றாலே பெரிய பயம். மல்லி பொடியையும் மஞ்சளையும் அல்லது மல்லி சாற்றை பயன்படுத்தி பருக்களை பெரிதளவில் குறைக்கலாம்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்
மல்லி பொடியில் உள்ள மற்றோடு மிகப்பெரிய மருத்துவ குணம் என்ன தெரியுமா? அது கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கும். மல்லியை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.