கருப்பு சுண்டல் :
கருப்பு கொண்டைக்கடலையில் நிறைய அளவு புரோட்டீன் காணப்படுகிறது. இது உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. கொண்டைக்கடலையை வைத்து உங்க உடல் எடையை குறைக்க முடியும். கூந்தல் ஆரோக்கியத்திற்கும், அடர்த்தியான கூந்தலுக்கும் உதவுகிறது. கொண்டைக்கடலை நாள்பட்ட நோய்களை விரட்டவும் உதவுகிறது. இரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபின் அளவை உயர்த்த முடியும். ஏனெனில் கொண்டைக்கடலையில் இரும்புச் சத்து அதிகளவு காணப்படுகிறது. சருமம் வயதாகுவதை தடுக்கிறது.
ஊற வைத்த கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள புரோட்டீன் சத்து உங்க உடலுக்கு ஆற்றலை அளிக்க உதவுகிறது. கருப்பு கொண்டைக்கடலையை பயன்படுத்தி இரும்புச் சத்து குறைப்பாட்டை போக்க முடியும். இரும்புச் சத்து நிறைந்தது என்பதால் உங்க உடலில் ஹூமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்துக்கள் சீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது. உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது உங்க செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. கருப்பு கொண்டைக்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மற்றும் சீரணமின்மையை நம்மால் போக்க முடியும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கருப்பு கொண்டைக்கடலையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்கள் உள்ளன. இது இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதிலுள்ள மினரல்கள் இரத்தம் கட்டுதலை தடுக்க உதவுகிறது.