Sale!

Black Mustard – சிறு கடுகு

25.0040.00

Mustard seeds are also a good source of several vitamins, including vitamins C and K, thiamin, riboflavin, vitamin B6, and folic acid. They have a high percentage of dietary fiber and are a valuable source of several bioactive compounds such as antioxidants and polyunsaturated fatty acids.

SKU: N/A Category: 1

சிறு கடுகு : 

கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணெய்ச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக் பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்கள
கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்சிதை மாற்றம் அடையும் நார்சத்து உள்ளது. கெட்ட  கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

நியாசிசன் (வைட்டமின் பி3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினி யம், துத்தநாகம் போன்ற  தாது உப்புக் களும் கடுகில் உள்ளது.

கடுகை உணவில் சேர்த்துக்கொள்வதால் செரிமானம் அதிகமாகிறது. வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கக்கூடியது. இதயத்திற்கு நலன் தரக்கூடியது. பொதுவாக, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீன் எண்ணெயில் அதிகமாக உள்ள நிலையில், தாவரப் பொருட்களில் கடுகில் இந்த கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதாம். அதனால்தான், இதயத்திற்கு கடுகு நல்லது என்கிறார்கள். கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், இதயத்துக்கு மிகவும் நல்லது. நரம்பு சார்ந்த வலிகள், வீக்கங்கள் இருந்தால் அதற்கு நிவாரணமாக இருப்பது இந்த கடுகு எண்ணெய்தான்.

மார்பகம், நுரையீரல், பெருங்குடல் ஆகிய பகுதிகளில் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. கடுகை உணவில் பயன்படுத்தினால், கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவதுடன், உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகள் வந்துவிட்டால், அதற்கு கடுகை அரைத்துப் பூசுவார்கள்.

 

 

 

Weight N/A
weight

200g, 100g

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare