Sale!

Bengal Gram – கடலை பருப்பு

80.00130.00

Bengal Gram is high in minerals like zinc, equipping this humble dal with some anti-inflammatory and anti-bacterial properties. Including this dal as a part of your balanced diet can help keep skin disorders including acne and eczema in control, while also playing a role in keeping your skin youthful and nourished.

SKU: N/A Category: 1

கடலை பருப்பு : 

உடல் வளர்ச்சி உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

நோய் எதிர்ப்பு ஆற்றல் எத்தகைய நோய்களும் நம்மை அணுகாமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். கடலை பருப்பில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர தாது சத்துகள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.

இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது. இதயம் இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடலை பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. எனவே கடலை பருப்பை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது.

செரிமானம் நாம் உண்ணும் உணவை நன்கு செரிமானம் செய்யும் சக்தி நமக்கு இருக்க வேண்டும். கடலை பருப்பில் எளிதில் செரிமானமாக கூடிய புரத சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் சுரப்பை தூண்டி சாப்பிடும் உணவு எளிதில் செரிமானமாக செய்கிறது.

வயிற்றில் புண்கள், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. உடல் எடை பெருக்க உலகில் பல நாடுகளில் சரியான ஊட்டச்சத்து உணவுகள் கிடைக்க பெறாமலும், முறையான உணவு பழக்கத்தை பின்பற்றாமல் இருப்பதாலும் பல மக்கள் தங்களின் வயதிற்கேற்ற சராசரி எடைக்கு குறைவான உடல் எடையையே கொண்டிருக்கிறனர். கடலை பருப்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீக்கிரத்தில் கூடும்.

வலிமையான எலும்புகள் கால்சியம், மக்னீசியம் ஆகிய இரண்டு தாதுகளும் நரம்புகள் மட்டுமன்றி எலும்புகளின் வளர்ச்சிக்கும் தேவையானதாக இருக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இவையிரண்டும் அவசியம். கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துகள் கடலை பருப்பில் உள்ளதால் இதை சாப்பிட்டு வரும் நபர்களுக்கு எலும்புகள் வலிமை பெறும்.

தலைமுடி நமக்கு அழகிய தோற்றத்தை தருவதோடு மட்டுமல்லாமல், நமது தலையை அதிக வெப்பம் மற்றும் குளிரிலிருந்து காக்கும் கவசமாகவும் இருக்கிறது. தலைமுடி உதிராமல் இருப்பதற்கு நாம் உண்ணும் உணவில் புரத சத்து அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.கடலை பருப்பை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் புரத சத்து சேர்ந்து தலைமுடி உதிராமல் பாதுகாக்கும். நரம்புகள் கடலை பருப்பில் மக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் அதிகமுள்ளது. மக்னீசியம் எலும்புகளின் மேற்பரப்பில் இருப்பதால், அவை கால்சியம் நரம்பு செல்களுக்குள் நுழைவதைத் தடுப்பதுடன், இரத்த நாளங்கள் மற்றும் தசைகளில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்துகிறது.

நரம்பு தளர்ச்சி மற்றும் வாத நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. நீரிழிவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுலபத்தில் உடல் பலத்தையும், ரத்தத்தில் அவசியமான சத்துக்களையும் இழந்து விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு கடலை பருப்பு கலந்து தயாரான உணவுகள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் கடலை பருப்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் பலத்தை தரும்.

Weight N/A
weight

1Kg, 500g

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare